×

நெஞ்சை உலுக்கும் புதிய வீடியோ : அமைதி பேரணி சென்ற விவசாயிகள் மீது அதிவேகத்தில் வாகனம் மோதல்; விபத்து அல்ல; கொலை தான் என கருத்து!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தின் கெரி பகுதியில் 4 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றொரு புதிய வீடியோ வெளியாகி உள்ளது. நெஞ்சை உலுக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைதியாக பேரணியாக சென்று கொண்டு இருந்த விவசாயிகள் மீது பின்னால் இருந்து வந்த வாகனம் வேகமாக மோதியது. வேகத்தை குறைக்காமல் வந்த அந்த வாகனம் மோதியதில் மக்கள் கொத்து கொத்தாக தூக்கி வீசப்பட்டனர். என்ன நடந்தது என தெரியாமல் விவசாயிகள் பரிதவித்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் முதல் வாகனத்தை தொடர்ந்து வந்த மற்ற வாகனங்களும் வேகத்தை சற்றும் குறைக்காமல் அதன் போக்கில் செல்கின்றனர்.அதில் ஒரு வாகனத்தில் பாதுகாப்பு அதிகாரி இருப்பதும் தெளிவாக தெரிகிறது. எனவே இந்த விபத்து அல்ல என்றும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலாக தான் கருத முடியும் என்றும் சமூகவலைத்தளங்களில் வீடியோவை பகிர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதற்கு முன் இந்த தாக்குதல் தொடர்பாக பதைபதைக்கும் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் வாகனத்தின் முகப்பில் விவசாயி தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகி இருந்தது. * உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவுலக்கிம்பூர் விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றம் நேற்றிரவு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இது, இன்று உடனடியாக விசாரணைக்கு வருகிறது….

The post நெஞ்சை உலுக்கும் புதிய வீடியோ : அமைதி பேரணி சென்ற விவசாயிகள் மீது அதிவேகத்தில் வாகனம் மோதல்; விபத்து அல்ல; கொலை தான் என கருத்து!! appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Keri region ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில்...